/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தார் ரோடு அமைக்க விவசாயிகள் கோரிக்கை
/
தார் ரோடு அமைக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : டிச 05, 2025 06:57 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோதவாடியில் உள்ள மண் ரோட்டை தார் ரோடாக மாற்றம் செய்ய வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.
கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சி அருகே உள்ள செட்டியக்காபாளையம் மாலைக்கோயில் முதல், கோதவாடி எல்லை வழியாக கோடங்கிபாளையம் செல்லும் ரோடு, இரண்டு கி.மீ., உள்ளது. தற்போது இது மண் ரோடாக உள்ளது.
இந்த ரோட்டில், விவசாயிகள் விளைபொருட்களை வாகனங்களில் எடுத்து செல்கின்றனர். குறிப்பாக, இரவு நேரம் மற்றும் மழை காலங்களில் இந்த ரோட்டில் பைக்கில் செல்பவர்கள் கடும் சிரமத்துடன் பயணிக்க நேரிடுகிறது. இரவு நேரத்தில் வாகனங்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றன.
எனவே, இந்த மண் ரோட்டை தார் ரோடாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

