/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை கொட்டுவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
/
குப்பை கொட்டுவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜன 02, 2026 05:17 AM
பெ.நா.பாளையம், ஜன. 2--
சின்னதடாகம் பெரிய பள்ளத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க, அப்பகுதியில் எச்சரிக்கை பலகையும், மின் விளக்கும் அமைக்கப்பட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னதடாகம் ஊராட்சி, பெரிய பள்ளத்தில் பாலம் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. இது தொடர்பாக சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், மாவட்ட நிர்வாகத்துக்கு, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தது.
இதையடுத்து பாலம் அருகே பெரிய பள்ளத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, அப்பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டாமல் இருக்க எச்சரிக்கை பலகையும், இப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்புக்காக மின்விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும், சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் பிரபு, கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

