/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : பிப் 27, 2026 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் நேற்று மூன்றாவது நாளாக பரவலாக மழை பெய்தது. மாசி, பங்குனி பட்டத்தில் சாகுபடி செய்ய காத்திருந்த விவசாயிகள், மழை பொழிவால் மகிழ்ச்சி அடைந்தனர். இன்னும் இரு நாட்களுக்கு மழை பெய்யும் என்ற வானிலை மைய அறிவிப்பு காரணமாக, சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு (மி.மீ.,) வருமாறு:
வால்பாறை - 4, மேல்ஆழியாறு - 6, வேட்டைக்காரன்புதுார் - 14.2, துாணக்கடவு - 2, பெருவாரிப்பள்ளம் - 4, மேல் ஆழியாறு - 2, பொள்ளாச்சி - 5.4, நல்லாறு - 24, சுல்தான்பேட்டை - 53 என, மழை பெய்தது.

