/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகம் திறப்பு
/
விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகம் திறப்பு
ADDED : நவ 05, 2025 09:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோமனூர்: சோமனூர் - மாதப்பூர் ரோட்டில், கருமத்தம்பட்டி நகர தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலக திறப்பு விழா நடந்தது. சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி திறந்து வைத்து பேசினார்.
மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் சண்முகசுந்தரம், பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன், வக்கீல் பிரபாகரன் உள்ளிட்டோர் பேசினர்.
தொடர்ந்து, டிச., 28 ம்தேதி விஜயமங்கலத்தில் நடக்கும் உரிமை மீட்பு, கடன் விடுதலை மாநில மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மகளிரணி உள்ளிட்ட பிரிவுகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

