/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலம் அளக்க வந்த அதிகாரிகளை திருப்பி அனுப்பிய விவசாயிகள்
/
நிலம் அளக்க வந்த அதிகாரிகளை திருப்பி அனுப்பிய விவசாயிகள்
நிலம் அளக்க வந்த அதிகாரிகளை திருப்பி அனுப்பிய விவசாயிகள்
நிலம் அளக்க வந்த அதிகாரிகளை திருப்பி அனுப்பிய விவசாயிகள்
ADDED : மே 08, 2025 12:35 AM
அன்னுார்; கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், 25 ஆண்டுகளாக கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதற்கு தீர்வாக, சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையம் துவங்கி கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டி, சத்தி வழியாக, கர்நாடகா எல்லை வரை நான்கு வழி பசுமைவழிச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கி உள்ளது. இதற்காக நில உரிமையாளர்களுக்கு 3ஏ நோட்டீஸ் வழங்கும் பணி துவங்கி உள்ளது. அன்னுார் சத்தி சாலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கோண மூலை கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த சர்வேயர் மற்றும் அதிகாரிகள் நில அளவீடு செய்ய நேற்று காலை வந்தனர்.
தகவல் அறிந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு திரண்டனர். அதிகாரிகளிடம், 'நில அளவீடு செய்யக்கூடாது. விவசாய நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம். எங்களது கேள்விகளுக்கு பதில் தெரிவிக்காமல் கையகப்படுத்தும் பணியை துவக்க கூடாது,' என்றனர்.
இதைத்தொடர்ந்து ஆட்சேபனையை எழுத்துப்பூர்வமாக தரும்படி அதிகாரிகள் கேட்டனர். கிராம மக்கள், 'நிலம் அளவீடு செய்ய ஆட்சேபிக்கிறோம்,' என எழுதிக் கொடுத்தனர்
இதைப் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் நில அளவீடு செய்யாமல் திரும்பி சென்றனர். இதையடுத்து விவசாயிகளும் கலைந்து சென்றனர்.