/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காய்கறி விலை சரிவு விவசாயிகள் அதிர்ச்சி
/
காய்கறி விலை சரிவு விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : டிச 31, 2024 05:53 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து சராசரியாக இருக்கும் நிலையில் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நாள்தோறும் ஏல முறையில் காய்கறிகள் உடனுக்குடன் விற்பனையாவதால், மார்க்கெட்டுக்கு விவசாயிகள் விளைபொருட்களை அதிகளவு கொண்டு வருகின்றனர்.
தற்போது, கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், காய்கறிகள் வரத்து சராசரியாகவும், விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வரத்து உயராத நிலையில், விலை சரிவு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மார்க்கெட்டில் தக்காளி - (15 கிலோ) பெட்டி - 220, கத்திரிக்காய் கிலோ -- 20, வெண்டைக்காய் --- 30, முள்ளங்கி --- 33, வெள்ளரிக்காய் --- 32, பூசணிக்காய் --- 10, அரசாணிக்காய் --- 15, பாகற்காய் --- 35, புடலை --- 30, சுரைக்காய் --- 30, பீர்க்கங்காய் --- 60, பீட்ரூட் --- 45, அவரைக்காய் --- 55, பச்சை மிளகாய் - 58 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை விட தற்போது தக்காளி (15 கிலோ) --- 150 ரூபாய், கத்திரிக்காய் கிலோ --- 13, வெண்டைக்காய் --- 10, முள்ளங்கி --- 7, சுரைக்காய் -- 6, பூசணிக்காய், புடலை மற்றும் அவரைக்காய் தலா 3 ரூபாய் விலை குறைந்துள்ளது. மேலும், பீர்க்கங்காய் --- 5 மற்றும் பச்சை மிளகாய் -- -11 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'பனி காலம் என்பதால் காய்கறிகள் வரத்து வழக்கத்தை விட குறைந்த அளவே உள்ளது. மேலும், காய்கறிகள் விலையும் சரிந்துள்ளது. அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி காய்கறிகள் விலை உயரும்,' என்றனர்.

