/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிற்பேட்டை அறிவிப்புக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு
/
தொழிற்பேட்டை அறிவிப்புக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு
தொழிற்பேட்டை அறிவிப்புக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு
தொழிற்பேட்டை அறிவிப்புக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு
ADDED : பிப் 02, 2025 01:22 AM

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா மெட்டுவாவி பகுதியில், 1,500 ஏக்கரில் 'சிப்காட்' தொழிற் பேட்டை அமைக்க, அரசு அறிவிப்புக்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திட்டத்துக்காக, விவசாய விளை நிலங்களை கையப்படுத்த, 'ட்ரோன்' வாயிலாக இரவு நேரத்தில் அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கோவை கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மனு அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:-
மெட்டுவாவி பகுதியில் விவசாயம் மட்டுமின்றி, பட்டுப்பூச்சி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழிப்பண்ணை, பால் பண்ணை தொழில்களும் செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் பருவமழை நன்கு பெய்வதால், விவசாயம் செழிப்பாக இருக்கும்.
இங்கு 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைத்தால், விவசாய நிலங்கள் பாழாகும். விவசாய நிலங்கள் பறிபோகும். விவசாயிகளின் வாழ்வாதாரமும், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படும். ஆகவே, திட்டத்தை இங்கு செயல்படுத்தக்கூடாது.
இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கிராந்திகுமார், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.