தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மானியம் வழங்கும் திட்டம் கேட்கிறது விவசாயிகள் சங்கம்

மானியம் வழங்கும் திட்டம் கேட்கிறது விவசாயிகள் சங்கம்

மானியம் வழங்கும் திட்டம் கேட்கிறது விவசாயிகள் சங்கம்


UPDATED : நவ 27, 2026 10:00 PM

ADDED : நவ 27, 2026 10:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 10:00 PM ADDED : நவ 27, 2026 10:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.

செட்டிபாளையம் பகுதியில் உள்ள காடுகுட்டை நீர்நிலையை, மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் மூலம் இயற்கை சார்ந்த உயிரியல் முறையில் சுத்திகரிக்க, காடுகுட்டை பாதுகாப்புக் குழு மற்றும் கவுசிகா நீர்க்கரங்கள் அமைப்பினர் வலியுறுத்தினர்.

சொட்டுநீர் பாசனத் திட்டத்தின் கீழ், தோட்டப் பகுதிகளில் நிலமட்டத் தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரம், மோட்டார் அமைக்க ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.55 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

தடுப்பணைகளை தூர்வாருதல், தட்கல் மின் இணைப்பு வழங்குதல், நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நில அளவைப் பணிகளில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்த்தல், பத்திரப்பதிவுத் துறை தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

முன்னதாக, விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்த கையேடு வெளியிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us