/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்வழிப்பாதை மீட்க விவசாயிகள் வலியுறுத்தல்
/
நீர்வழிப்பாதை மீட்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஆக 23, 2025 02:41 AM
கோவை: துடியலுார் கிராமத்தில் கவுசிகா நதியின் கிளை ஓடையில், 60 அடி அகலம் கொண்ட நீர்வழிப்பாதையை, 30 அடிக்கு ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். கிராவல் மண் கொட்டி, பாதை உருவாக்கியுள்ளதோடு, சுற்றுச்சுவர் அமைத்துள்ளார். ஆக்கிரமிப்பாளரே தாமாக முன்வந்து அவற்றை அகற்ற கோவை வடக்கு கோட்டாட்சியர் அவகாசம் வழங்கினார். இருப்பினும், அகற்றாமல், தற்போது தார் சாலை அமைத்து வருகின்றனர்.
நீர், நிலம் மாசுபடுதல் சட்டம் 1974 பிரிவு 30(3) படி ஆக்கிரமிப்பாளரிடம் அபராதம் வசூலிக்கவும், அரசுக்கு சொந்தமான நிலம் என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்க மாவட்ட செயலாளர் ரங்கநாதன் கூறுகையில், ''கவுசிகா நதி கிளை ஓடையை ஆக்கிரமித்திருப்பது தொடர்பாக, வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார், கோட்டாட்சியர் கள ஆய்வு செய்தனர். மாநகராட்சி கமிஷனரும், உதவி கமிஷனரும் பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பை அகற்றி, நீர்வழிப்பாதையை மீட்டு, ஆக்கிரமிப்பாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும்,'' என்றார்.