/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுதானியம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
/
சிறுதானியம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : நவ 04, 2025 09:03 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்று வட்டார விவசாயிகள் சிறுதானியம் மற்றும் பயிறு வகைகளை பயிர் செய்ய வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு, தேசிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், ரபி பருவத்திற்கு சிறுதானியம் மற்றும் பயிறு வகைகளை பயிர் செய்ய வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதில், சோளம், தட்டை, உளுந்து உள்ளிட்ட சான்று பெற்ற விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சோளம் பயிரில், கோ - 32 மற்றும் கே -- 12 ரகம் உள்ளது.
பயிர் வகைகள் ஒரு கிலோவுக்கு, 50 ரூபாய் மானியமும், சிறுதானிய வகைகள் ஒரு கிலோவுக்கு, 40 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது. விதைகளை பெற சிட்டா, ஆதார் ஜெராக்ஸ் வழங்கி பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை கிணத்துக்கடவு வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

