ADDED : செப் 13, 2026 08:43 PM
அன்னுார்: மேகதாது அணை கட்டக்கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அன்னுாரில் பிரசார இயக்கம் நடந்தது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணைகட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது, தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை ஏற்கக் கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அனைத்து துறைகளிலும் குறைந்தபட்ச ஊதியம் 42 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், நல வாரியங்கள் முடங்கி போக அனுமதிக்க கூடாது என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு வார பிரசார இயக்கம் நடத்த, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அன்னுாரில் நேற்று சந்தை திடல், ஓதிமலை சாலை, பிரதான சாலை, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் மயில்சாமி, நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, லோகநாதன், வரதராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
