தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இனி வேகமாகும் தபால் பட்டுவாடா

 இனி வேகமாகும் தபால் பட்டுவாடா

 இனி வேகமாகும் தபால் பட்டுவாடா


ADDED : செப் 07, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சைக்கிள் மூலம் தபால் விநியோகம் செய்யும் முறையை, மோட்டார் வாகனங்கள் மூலம் செய்ய தபால் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டது. நகர்ப்புற தலைமை மற்றும் துணை தபால்நிலையங்களில் மோட்டார் வாகன வசதி அமல்படுத்தப்பட்டது.

தற்போது கிளை தபால் நிலையங்களிலும் இந்த நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம தபால் ஊழியர்கள் மற்றும் கிளை தபால் உதவி அதிகாரிகள், கணக்கு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தபால் பைகளைப் பெற்று வருகின்றனர்.

இதனால் தபால் விநியோகத்தில் தாமதம் ஏற்படுவதுடன், பெரிய பொட்டலங்களை கையாள்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, மோட்டார் வாகனங்கள் வாயிலாக விரைவாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து கிளை அஞ்சலகங்களிலும் இந்த விநியோக முறை குறித்து, ஆய்வு நடக்கிறது. சாத்தியமுள்ள இடங்கள் மோட்டார் வாகன விநியோக முறைக்கு விரைவில் மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us