/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிழக்கு புறவழிச்சாலை திட்டம் கைவிட கோரி நாளை உண்ணாவிரதம்
/
கிழக்கு புறவழிச்சாலை திட்டம் கைவிட கோரி நாளை உண்ணாவிரதம்
கிழக்கு புறவழிச்சாலை திட்டம் கைவிட கோரி நாளை உண்ணாவிரதம்
கிழக்கு புறவழிச்சாலை திட்டம் கைவிட கோரி நாளை உண்ணாவிரதம்
ADDED : அக் 03, 2025 09:41 PM
கருமத்தம்பட்டி: கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை கைவிட கோரி, கிட்டாம்பாளையத்தில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
கோவை-திருச்சி ரோட்டில் உள்ள செம்மிபாளையத்தில் இருந்து, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள மத்தம் பாளையம் வரை, கிழக்கு புறவழி சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திட்டத்துக்கு எதிராக விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனர். திட்டத்தை கைவிட கோரி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கிழக்கு புறவழிச்சாலையால் பாதிக்கப்பட்டோர் சங்கம் சார்பில், கிட்டாம் பாளையத்தில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் நடக்கும் உண்ணாவிரதத்தில், தலைவர் சண்முகசுந்தரம், உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, ராவத்தூர் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.