/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆட்டிப்படைக்கிறது கொரோனா அச்சம்; மீண்டும் சூடு பிடிக்கிறது மாஸ்க் விற்பனை
/
ஆட்டிப்படைக்கிறது கொரோனா அச்சம்; மீண்டும் சூடு பிடிக்கிறது மாஸ்க் விற்பனை
ஆட்டிப்படைக்கிறது கொரோனா அச்சம்; மீண்டும் சூடு பிடிக்கிறது மாஸ்க் விற்பனை
ஆட்டிப்படைக்கிறது கொரோனா அச்சம்; மீண்டும் சூடு பிடிக்கிறது மாஸ்க் விற்பனை
ADDED : ஜூன் 05, 2025 01:21 AM

கோவை; பொது இடங்களுக்கு செல்லும் போது, முகக்கவசம் அணிய சுகாதார துறை அறிவுறுத்தியதை தொடர்ந்து, உஷாராகியுள்ள பொதுமக்கள் பலர், 'மாஸ்க்' அணிய துவங்கியுள்ளனர். இதனால் அதன் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இது, பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கொரோனா பரவல் இல்லை என, சுகாதார துறை தைரியம் சொல்கிறது. ஆனாலும் சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், தும்மல், இருமலின் போது கைக்குட்டையை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, சுவாச பிரச்னைகள், இணை நோய் உள்ளவர்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயம் மற்றும் விழிப்புணர்வு காரணமாக, மீண்டும் மாஸ்க் விற்பனை அதிகரித்துள்ளதாக, மருந்து விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட மருந்து விற்பனையாளர்கள் சங்க தலைவர் செல்வன் கூறுகையில்,''கொரோனாவுக்குப் பின், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சளி பிடித்தாலும், தாங்களாகவே முகக்கவசம் அணிய பழகிவிட்டனர். தற்போது பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிய, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதால், விற்பனை அதிகரித்துள்ளது,'' என்றார்.