/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்கம்பங்களால் அச்சம்: மாற்றியமைக்க கோரிக்கை
/
மின்கம்பங்களால் அச்சம்: மாற்றியமைக்க கோரிக்கை
ADDED : பிப் 06, 2025 09:37 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கல்லாபுரத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் ரோட்டில், மின் கம்பங்கள் சேதமடைந்து இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, கல்லாபுரத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் ரோட்டை, விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். மார்க்கெட்டுக்கு விளைபொருட்களை இந்த வழியில், வாகனங்களில் கொண்டு வருகின்றனர்.
இந்த ரோட்டில், ஒரு இடத்தில் மின் கம்பத்தின் மேல் பகுதி முழுவதும் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. இந்த கம்பம் எப்போது வேண்டுமானாலும் ரோட்டில் கீழே விழும் அபாயமான நிலையில் உள்ளது.
இதே போன்று, இந்த வழித்தடத்தில் மற்றொரு மின் கம்பம் ரோட்டின் நடுவே இருப்பதால் இரவு நேரத்தில் வரும், நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பலர் இவ்வழியில் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, விபத்தை தவிர்க்கும் வகையில், இந்த மின் கம்பங்களை மின்வாரியத்தினர் மாற்றி அமைக்க வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.