/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு முப்பெரும் விழா
/
மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு முப்பெரும் விழா
ADDED : செப் 14, 2025 11:30 PM
கோவை; அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சென்னை மற்றும் கோவை கிளைகள், தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், முப்பெரும் விழா, உக்கடம் பங்ஷன் அரங்கில் நேற்று நடந்தது.
இந்நிகழ்வில், அனைத்து அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாநில தலைவர் சந்திரகுமார் நிகழ்வுகளை துவக்கிவைத்தார். இதில், ஆறு மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும், ஆறு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் மேற்கு மண்டல அமைப்பு, நிகழ்வின் ஒரு பகுதியாக மாநில மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் சிம்மச்சந்திரன், பொதுச்செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரமோகன், கோவை மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் கண்ணியப்பன் உள்ளிட்ட, 320 பேர் பங்கேற்றனர்.