ADDED : ஜூன் 16, 2026 11:05 PM
அ நிறம் | அளவு
போத்தனூர்: வெள்ளலூர் பேரூராட்சி எட்டாவது வார்டில் முல்லை நகர் உள்ளது. இங்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார், 300 பேருக்கு நிலம் வழங்கப்பட்டது. பொது பயன்பாட்டிற்காக, 63 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. இதில் பொது கழிப்பிடம், கோவில் உள்ளன.
கடந்த வாரம் இங்கு ஒருவர் டீக்கடை வைக்க இரும்பு பெட்டி வைத்தார். அப்பகுதியிலிருந்தோர் பெட்டி அருகேயுள்ள இடத்தில் கயிறு கட்டி ஆக்கிரமித்தனர். ஆக்கிரமிப்பை தடுக்க பேரூராட்சி சார்பில் இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டது.
