/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றம்
/
மாரியம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜன 29, 2025 08:42 PM

வால்பாறை; வால்பாறையில், மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.
வால்பாறை, எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலில், 41ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. காலை, 9:30 மணிக்கு கொடிமரத்திற்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீரு உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் அபிேஷக பூஜைகள் நடந்தன.
அதனை தொடர்ந்து, அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்கார ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் முன்பாக திருக்கொடி ஏற்றப்பட்டது.
கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாரியம்மனுக்கு தினமும், சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு நடக்கிறது. விழாவில் வரும், பிப்., 2ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து சக்தி கும்பம் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
பிப்., 3ம் தேதி காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும், மதியம், அன்னதானமும் வழங்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை, கோவில் தலைவர் வெள்ளையன், செயலாளர் அர்ச்சுனன், பொருளாளர் சரவணன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.