/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றம்
ADDED : டிச 25, 2024 08:15 PM
வால்பாறை,; வால்பாறை, ைஹபாரஸ்ட் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை அடுத்துள்ளது ைஹபாரஸ்ட் எஸ்டேட் கீழ் டிவிஷன். இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. அதன்பின் சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.
விழாவில், நாளை இரவு 12:00 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 28ம் தேதி காலை, 9:00 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது. அதன்பின், மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கிறது. 29ம் தேதி மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.