/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியின மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
/
பழங்குடியின மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
ADDED : ஏப் 14, 2025 06:17 AM

வால்பாறை : பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில், மக்களை தேடி மருத்துவ முகாம் குழுவினர் நேரடியாக பரிசோதனை செய்தனர்.
வால்பாறை அடுத்துள்ளது வில்லோனி நெடுங்குன்றம் செட்டில்மெண்ட். இங்குள்ள வனப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ள இந்த செட்டில்மெண்ட் பகுதியில், வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, அரசு ஆரம்ப சுகதார நிலைய மருத்துவக்குழுவினர் மற்றும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர்.
வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாபுலட்சுமணன் தலைமையில் நடந்த முகாமில், பழங்குடியின மக்களுக்கு, ரத்த அழுத்தம், காய்ச்சல், சர்க்கரை நோய் உள்ளதா என்பது குறித்தும், பரிசோனை செய்த பின் மருந்து, மாத்திரைகளை மருத்துவக்குழுவினர் வழங்கினர்.
அவர்கள் மத்தியில் டாக்டர்கள் பேசும் போது, 'பழங்குடியின மக்கள் செட்டில்மெண்ட் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள, இயற்கையான உணவுகளையே அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக சத்துக்கள் நிறைந்த பழ வகைகள், பால், முட்டை, கீரை வகைளை அதிக அளவில் உட்கொண்டால், குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படாது. கோடை காலம் என்பதால், அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனை தொடர்ந்து இருந்தால், அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்' என்றனர்.