/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர்கல்வி சந்தேகங்கள் போக்க கல்லுாரிகளுக்கு களப்பயணம்
/
உயர்கல்வி சந்தேகங்கள் போக்க கல்லுாரிகளுக்கு களப்பயணம்
உயர்கல்வி சந்தேகங்கள் போக்க கல்லுாரிகளுக்கு களப்பயணம்
உயர்கல்வி சந்தேகங்கள் போக்க கல்லுாரிகளுக்கு களப்பயணம்
ADDED : செப் 25, 2025 12:29 AM
கோவை: கோவையில் உள்ள அரசு பள்ளிகளில், 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கல்லுாரிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக, அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், மருத்துவக் கல்லுாரி, வேளாண் பல்கலை, வனக்கல்லுாரி, பாராமெடிக்கல் கல்லுாரிகள் மற்றும் சில தனியார் கல்லுாரிகளுக்கு 5,850 மாணவர்களை அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 11,000 மாணவர்கள் 12ம் வகுப்பு படிக்கின்றனர். அரசு தரப்பில் வழங்கப்பட்ட பட்டியலில், உயர்கல்வி தொடர வாய்ப்புகள் குறைவாக உள்ள மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உயர்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தவே களப்பயணம் திட்டமிடப்பட்டது. இந்த வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மாவட்ட நிர்வாகம் அனைத்து மாணவர்களையும் களப்பயணம் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளது.
மாணவர்களிடம் அவர்களுக்கு பிடித்தமான துறைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு அழைத்து ச் செல்லப்படுவார்கள். காலாண்டு விடுமுறைக்குப் பின், பள்ளிகள் திறந்தவுடன், அக்., 6 முதல் இப்பணிகள் துவங்கும். இந்த முன்னெடுப்பு, மாணவர்களுக்கு கல்லுாரிகளின் சூழலையும், அங்குள்ள பாடப் பிரிவுகளையும் நேரடியாக அறிந்துகொள்ள சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.