/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லுாரிகளுக்கு களப்பயணம்
/
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லுாரிகளுக்கு களப்பயணம்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லுாரிகளுக்கு களப்பயணம்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லுாரிகளுக்கு களப்பயணம்
ADDED : ஜன 21, 2024 11:54 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே ஆனைமலை அரசுப்பள்ளி மாணவர்கள், 'நான் முதல்வன்' திட்டத்தின் வாயிலாக கல்லுாரிகளுக்கு களப்பயணமாக சென்றனர்.
தமிழக அரசின், 'நான் முதல்வன்' திட்டத்தின் வாயிலாக, அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் கல்லுாரி களப்பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது.
ஆனைமலை ஒன்றியத்தைச்சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்றனர். பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் அசோக், மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கினர்.
மேலும், கல்லுாரியில் உள்ள ஆய்வகங்கள், சிறப்பு மையங்களை பார்வையிட்டனர். கல்லுாரியின் இயந்திரவியல் துறைத்தலைவர் சம்பத்குமார் நன்றி கூறினார்.
தொடர்ந்து, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி முதல்வர் முத்துக்குமரன் பங்கேற்று மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
இரண்டு கல்லுாரிகளுக்கு களப்பயணமாக ஆனைமலை, சோமந்துறை சித்துார், கோட்டூர் உள்ளிட்ட எட்டு பள்ளிகளில் இருந்து, மொத்தம், 261 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.