/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடுப்பணையில் களப்பணி; தன்னார்வலர்கள் பங்கேற்பு
/
தடுப்பணையில் களப்பணி; தன்னார்வலர்கள் பங்கேற்பு
ADDED : டிச 16, 2024 09:27 PM
கோவில்பாளையம்; வையம்பாளையம் தடுப்பணை மற்றும் காலிங்கராயன் குளத்தில் நேற்றுமுன்தினம் களப்பணி நடந்தது. கோவில்பாளையம் அருகே வையம்பாளையத்தில் உள்ள தடுப்பணையில், கவுசிகா நீர்க்கரங்கள் மற்றும் வையம்பாளையம், தடுப்பணை பாதுகாப்பு குழு சார்பில், ஒவ்வொரு வாரமும், ஞாயிறன்று களப்பணி நடக்கிறது. 77 வது வாரமாக நேற்றுமுன்தினம் களப்பணி நடந்தது.
மழை நீர் வரும் பாதையில் உள்ள புதர்கள் அகற்றப்பட்டன. செடிகள் மற்றும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. மரக்கன்றுகளை சுற்றியுள்ள களைகள், குப்பைகள் அகற்றப்பட்டன. இதில் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
'ஒவ்வொரு வாரமும், ஞாயிறன்று காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை களப்பணி நடைபெறுகிறது. ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம்,' என தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.
இதே போல், கோவில்பாளையம் அருகே உள்ள 125 ஏக்கர் பரப்பளவு உள்ள காளிங்கராயன் குளத்தில் 256வது வாரமாக நேற்று முன் தினம் களப்பணி நடந்தது. புதர்கள், குப்பைகள் அகற்றப்பட்டன. மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

