/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவிநாசி தொகுதியில் போட்டியிட.. கடு ம் போட்டி . மாஜி எம்.எல்.ஏ.க்கள் 'நீயா...நானா'
/
அவிநாசி தொகுதியில் போட்டியிட.. கடு ம் போட்டி . மாஜி எம்.எல்.ஏ.க்கள் 'நீயா...நானா'
அவிநாசி தொகுதியில் போட்டியிட.. கடு ம் போட்டி . மாஜி எம்.எல்.ஏ.க்கள் 'நீயா...நானா'
அவிநாசி தொகுதியில் போட்டியிட.. கடு ம் போட்டி . மாஜி எம்.எல்.ஏ.க்கள் 'நீயா...நானா'
ADDED : ஜன 17, 2026 05:22 AM
அன்னூர், அவிநாசி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, மாஜி எம்.எல்.ஏ.,க்கள் உள்பட பலரும் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.
அவிநாசி தொகுதியில், அவிநாசி ஒன்றியம் திருப்பூர் மாவட்டத்திலும், அன்னூர் ஒன்றியம் கோவை மாவட்டத்திலும் உள்ளது. கடந்த, 1980 ம் ஆண்டு முதல் நடந்த, 10 சட்டசபை தேர்தல்களில் அவிநாசி தொகுதியில் ஒன்பது முறை அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. 96ம் ஆண்டு மட்டும் தி.மு.க.,வைச் சேர்ந்த இளங்கோ வெற்றி பெற்றார்.
எனவே அவிநாசி தொகுதி அ.தி.மு.க.,வின் கோட்டை என்று கருதப்படுகிறது. இங்கு போட்டியிட விருப்ப மனு பெற்று நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் 43 பேர் பங்கேற்றனர்.
இதில் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ., தனபாலின் மகன் லோகேஷ், மாஜி எம்.எல்.ஏ.,க்கள் கருப்புசாமி, பிரேமா, சீனியம்மாள், மகாலிங்கம் ஆகியோரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அ.தி.மு.க.,வினர் கூறுகையில், 'அவிநாசி தொகுதியில் அருந்ததியர் வகுப்பினர் அதிகம் உள்ளனர். எனவே, அருந்ததியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். குறிப்பாக தொகுதியில் வசிப்போருக்கு சீட்டு தர வேண்டும்' என்றனர்.
விருப்ப மனு கொடுத்த பலரும், கட்சித் தலைமையிடம் தங்களுக்கு தெரிந்த மாவட்ட மாநில நிர்வாகிகள் வாயிலாக தொடர்ந்து கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.
அவிநாசி தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தாலே வெற்றி உறுதி என்பதால், சீட்டு பெற கடும் போட்டி நிலவுகிறது.

