UPDATED : அக் 07, 2026 07:34 PM
ADDED : அக் 07, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
கோவை: சூலுார் அருகே, 10 வயது சிறுமி, பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் நாகப்பட்டினம் கார்த்திக், 33, தஞ்சாவூர் மோகன், 31, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபர் தரப்பில், இரு சாட்சிகளிடம் மீண்டும் விசாரிக்க அனுமதிக்கப்பட்டு விசாரணை நடந்தது. அவர்களிடம் அரசு தரப்பில் குறுக்கு விசாரணை நடந்தது. அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு இறுதி வாதம் இன்று நடக்கிறது. தொடர்ந்து தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
