தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இறுதி வாக்காளர் பட்டியல் தகவல் சரிபார்ப்பு தீவிரம்

இறுதி வாக்காளர் பட்டியல் தகவல் சரிபார்ப்பு தீவிரம்

இறுதி வாக்காளர் பட்டியல் தகவல் சரிபார்ப்பு தீவிரம்


ADDED : பிப் 06, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை : இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17ல் வெளியாகும் நிலையில், மாவட்டத்தில் 100 வயதை கடந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் விவரங்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த டிச.19-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தம் 25,74,608 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதனை தொடர்ந்து, பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, புதிதாக பெயர் சேர்க்க மட்டும் 1,03,445 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது இந்த விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி இறுதிக்

கட்டத்தை எட்டியுள்ளது.

இதனிடையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்வதற்காக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய குழுவினர் விரைவில் தமிழகம் வரவுள்ளனர். இக்குழுவினர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்த உள்ளனர். இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

சிறப்பு ஆய்வு

வாக்காளர் பட்டியலில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில், மாவட்டத்தில் 100 வயதைக் கடந்த 165 வாக்காளர்களின் நிலையை மீண்டும் ஒருமுறை கள ஆய்வு செய்து சரிபார்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் வசிப்பிடத்தில் உள்ளனரா அல்லது ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் நாளில் அவர்களுக்கு தேவையான சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க ஏதுவாக, வாக்காளர் பட்டியலில் அவர்களை குறியீடு செய்யும் பணி நடக்கிறது.

இதுவரை 13 ஆயிரம் பேர் படிவம் 8-ல் தங்களை மாற்றுத்திறனாளிகள் என குறிப்பிட்டுள்ளனர். மீதமுள்ள வாக்காளர்களையும் அடையாளம் கண்டு குறியீடு செய்யும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us