/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சியில் அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பு; திருப்பி செலுத்த தணிக்கை அறிக்கையில் உத்தரவு

ADDED : நவ 24, 2024 11:40 PM
அன்னுார்; நூறு நாள் வேலை திட்டத்தில் அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை, திருப்பி செலுத்த தணிக்கை அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், வடவள்ளி ஊராட்சியில், 2023 ஏப். 1 முதல், 2024 மார்ச் 31 வரை, 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 122 பணிகள் செய்யப்பட்டுள்ளன. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில், தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 17 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இப்பணிகள் குறித்த சமூக தணிக்கை, வட்டார வள அலுவலர் கனகராஜ் தலைமையில் நடந்தது.
ஊராட்சி அலுவலகம் முன் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் 100 நாள் வேலை திட்டத்தில் ஐந்து ஆட்சேபனைகளும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில், ஐந்து ஆட்சேபனைகளும் தெரிவிக்கப்பட்டன.
இத்திட்டத்தில் ஏற்பட்ட நிதியிழப்பை திரும்ப அரசுக்கு செலுத்த தணிக்கை அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் தொழிலாளர்கள் ஆண்டுக்கு, 150 நாட்கள் வேலை தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஊராட்சி தலைவர் செல்வி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், ஊராட்சி செயலாளர் ரங்கசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.