/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெத்தை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து
/
மெத்தை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து
ADDED : மே 04, 2025 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சிவானந்தா காலனி, ராகவன் வீதியில் ஜாபர் என்பவருக்கு சொந்தமான மெத்தை தயாரிக்கும் குடோன் உள்ளது. இங்கு, மெத்தை தயாரிக்க தேவையான நுால், பஞ்சு, துணி உள்ளிட்ட மூலப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
நேற்று காலை இந்த குடோனில் இருந்து, கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர், ரத்தினபுரி போலீசார் மற்றும் கவுண்டம்பாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின.
தீ விபத்துக்கான காரணம் குறித்து, ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

