ADDED : ஏப் 25, 2026 08:15 PM
அ நிறம் | அளவு
கோவை: பீளமேட்டில் இருதயராஜா என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகன ஒர்க்ஷாப் உள்ளது. மூடப்பட்டிருந்த ஒர்க்ஷாப்பில் இருந்து புகை வந்தது.
சிறிது நேரத்தில் தீ பிடித்து எரிந்தது. உடனடியாக பீளமேடு தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் தீயணைப்பு வண்டியுடன் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், பழுது பார்க்க நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பைக் எரிந்தது. பீளமேடு போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
