/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டாசு விபத்து தடுக்க தீயணைப்புத்துறை பயிற்சி
/
பட்டாசு விபத்து தடுக்க தீயணைப்புத்துறை பயிற்சி
ADDED : அக் 29, 2024 11:48 PM
தொண்டாமுத்தூர்: தீபாவளி பண்டிகையின் போது, தீ விபத்துக்கள் ஏற்பட்டால், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு, தீயணைப்பு வீரர்கள் பயிற்சியளித்தனர்.
நாடு முழுவதும் நாளை, தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பட்டாசுகள், இனிப்புகள், புத்தாடைகள் என, தீபாவளி களைகட்டும். பட்டாசு வெடிக்கும்போது, ஒரு சில இடங்களில் எதிர்பாராத விதமாக தீ விபத்துகள் ஏற்படும்.
இந்நிலையில், தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் சார்பில், தீபாவளி பண்டிகையின் போது எதிர்பாராத விதமாக தீ விபத்துகள் ஏற்பட்டால், தங்களை காத்துக்கொள்வதற்கும், மற்றவர்களை காத்துக்கொள்வதற்கும் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, தீயணைப்பு நிலைய அலுவலர் அனில் குமார் தலைமையிலான, தீயணைப்பு வீரர்கள் செயல்முறை பயிற்சி அளித்தனர்.
தொடர்ந்து, வீடுகளில் பயன்படுத்தும் காஸ் சிலிண்டரில் தீ விபத்து ஏற்பட்டால், தீயை அணைப்பது குறித்தும், புகை அதிகமாக இருந்தால், புகை வெளியே செல்லும் வகையில் ஜன்னல், கதவுகளை திறந்து விடவேண்டும், விரைந்து வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.
பேரிடர் காலங்களில், உயரமான கட்டடங்களில் இருந்து, பாதுகாப்பாக கீழே இறங்குவது குறித்தும் செயல்முறை மூலம் மாணவர்களுக்கு விளக்கினர்.