/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் தீ விபத்து இல்லாத தீபாவளி
/
அன்னுாரில் தீ விபத்து இல்லாத தீபாவளி
ADDED : அக் 21, 2025 10:14 PM
அன்னுார்: அன்னுார் வட்டாரத்தில் தீபாவளி தீ விபத்து இல்லாத தீபாவளியாக முடிந்துள்ளது.
அன்னுார் வட்டாரத்தில், ஒரு பேரூராட்சி, 21 ஊராட்சிகளில் ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த வட்டாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் ஒன்று அல்லது இரண்டு தீ விபத்துக்கள் நடப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கடந்த 48 மணி நேரத்தில் ஒரு தீ விபத்து கூட ஏற்படவில்லை. இதுகுறித்து அன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் கூறுகையில், தீ விபத்து குறித்து அன்னுார் தீயணைப்பு நிலையத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக ஒரு அழைப்பு கூட வரவில்லை.
வடகிழக்கு பருவமழை காரணமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாலும் தீ விபத்து இல்லாத தீபாவளியாக அன்னுார் வட்டாரத்தில் கொண்டாடப்பட்டுள்ளது, என்றார்.