தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கழிவில் பற்றியது தீ: தீர்வு எப்போது?

கழிவில் பற்றியது தீ: தீர்வு எப்போது?

கழிவில் பற்றியது தீ: தீர்வு எப்போது?


UPDATED : ஆக 23, 2026 06:50 PM

ADDED : ஆக 23, 2026 06:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2026 06:50 PM ADDED : ஆக 23, 2026 06:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போத்தனூர்: வெள்ளலுார் குப்பைக்கிடங்கில் மீண்டும் தீப்பிடித்தது.

போத்தனூர் -- செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சி கழிவுநீர் பண்ணை உள்ளது. இதன் ஒரு பகுதியில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவு கொட்டப்படுகிறது.

நிலத்தடி நீர் மாசு, ஈ, கொசுத்தொல்லை, மூச்சுத்திணறல், ஒவ்வாமை, தோல் நோய் உள்ளிட்ட- பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்திக்கின்றனர். இதனிடையே அடிக்கடி கழிவில் பற்றும் தீயால், மக்கள் அவதிக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது.

அத்தகைய ஒரு சம்பவம்தான் நேற்று காலை நடந்தது. காலை 6:00 மணியளவில் அதிவிரைவு படை முகாம் அருகே கழிவில் பற்றிய தீ வேகமாக பரவியது.

கோவை தெற்கு, வடக்கு, கோவைபுதூர் மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையங்களிலிருந்து, எட்டு வாகனங்களில் வந்த 60 பேர், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். புகை மண்டலம் சுற்றுப்பகுதிகளில் பரவியது. துர்நாற்றம் காரணமாக இப்பகுதி மக்கள் கதவு, ஜன்னல்களை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

காற்று வீசும் திசைக்கேற்ப தீ பரவியதால், மேலும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். மதியம் 1:00 மணியை தாண்டியும் தீயணைக்கும் பணி தொடர்ந்தது.

தீப்பிடித்ததன் காரணம் மர்மம்

தீ பிடித்தது குறித்து செய்தி சேகரிக்கவும், புகைப்படம், வீடியோ எடுக்கவும் சென்ற பத்திரிகையாளர்களை, வாட்ச்மேன்கள், மாநகராட்சி அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. கேட்டால், கமிஷனர் அனுமதிக்கக் கூடாது என கூறியுள்ளதாக பதிலளிக்கின்றனர்.

குப்பை கழிவில் ஊழல் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமான இந்நடவடிக்கை, சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

இங்குள்ள கழிவு அகற்றுவது தொடர்பாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்த விபரம், அரசால் சேகரிக்கப்படுகிறது.

இதுவும் தீ பிடித்ததற்கு ஒரு காரணமோ எனும் சந்தேகம் சமூக ஆர்வலர்களிடையே ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us