/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலை மீது சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி
/
மலை மீது சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி
மலை மீது சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி
மலை மீது சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி
ADDED : மார் 23, 2025 11:22 PM

சூலுார் : மலைகள் மற்றும் உயர்ந்த கட்டடங்கள் மீது சிக்கியவர்களை மீட்கும் பயிற்சி தீயணைப்பு வீரர்களுக்கு அளிக்கப்பட்டது.
சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரிமலையில், பேரிடர் காலங்களில், மலை மீது சிக்கியவர்களை மீட்பது குறித்த பயிற்சியில் சூலுார் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
சூலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமசுப்பிரமணியம், ரவிக்குமார்(பீளமேடு), மார்ட்டின் (கோவைப் புதூர்) ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில் பகுதியில் பயிற்சி மேற்கொண்டனர்.
மலை மீது சிக்கி கொண்டவர்களை கயிறு கட்டி, எப்படி கீழே கொண்டு வருவது உள்ளிட்ட பயிற்சியை மேற்கொண்டனர். மேலும், தீ விபத்து ஏற்பட்டால், பாதுகாப்பாக வெளியேறுவது மற்றும் தீயை அணைக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். பேரிடர் காலங்களில் கவனமாக செயல்பட வேண்டும். பதற்றம் அடைய கூடாது. உண்மை என்ன என்பது தெரியாமல், வதந்திகளை நம்ப வேண்டாம். தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிப்பது முக்கியமானது ஆகும், என, அதிகாரிகள் கூறினர்.
செல்போன் டவர்கள் மற்றும் உயரமான கட்ட டங்களில் சிக்கியவர்களை, நவீன மீட்பு இயந்திரங்களை கொண்டு மீட்பது குறித்த பயிற்சியையும் வீரர்கள் மேற்கொண்டனர்.
சென்னையை சேர்ந்த சிறப்பு பயிற்சியாளர் மைக்கேல் வீரர்களுக்கு பயிற்சி அளித்தார்.