/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் முதல் முறை டிவிஷன் கிரிக்கெட் போட்டி
/
அன்னுாரில் முதல் முறை டிவிஷன் கிரிக்கெட் போட்டி
ADDED : நவ 12, 2024 08:24 PM
அன்னுார்; அன்னுாரில் முதல் முறையாக கோவை மாவட்ட முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டி நடந்தது.
கோவை மாவட்ட கிரிக்கெட் கிளப் சார்பில், முதல் டிவிஷன் அணிகளுக்கான லீக் போட்டி முதல் முறையாக, அன்னுார் அருகே வடக்கலூரில், திஷா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த கோவை ஆர். கே.எஸ்.,அணி 49.1 ஓவர்களில், 171 ரன்கள் எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த அணியில் சந்தோஷ் 54 ரன்கள் எடுத்தார். ஆர்.கே.எஸ்., அணி பந்து வீச்சாளர் பாலசுப்பிரமணி 17 ரன்கள் மட்டும் கொடுத்து, நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்த விளையாடிய, கோவை காஸ்மோ வில்லேஜ் அணி 46 ஓவர்களில், 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆர்.கே.எஸ்., அணி வெற்றி பெற்றது.
காஸ்மோ அணி பந்துவீச்சாளர் ஹரிகரன் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் முறையாக அன்னுாரில் கோயம்புத்தூர் கிரிக்கெட் கிளப் நடத்தும் முதல் டிவிசன் கிரிக்கெட் போட்டி நடந்ததால், ஏராளமான இளைஞர்கள் போட்டியை பார்த்து ரசித்தனர்.

