/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நல்லட்டிபாளையம் பள்ளிக்கு முதல் பரிசு
/
நல்லட்டிபாளையம் பள்ளிக்கு முதல் பரிசு
ADDED : செப் 16, 2025 09:54 PM

கிணத்துக்கடவு; கோவை மாவட்டத்தில் நடந்த அரசு பள்ளி நூற்றாண்டு விழாக்களில், நல்லட்டிபாளையம் அரசு பள்ளி பரிசு பெற்றது.
கோவையில் உள்ள அரசு பள்ளிகளில், நூற்றாண்டை கடந்த, 58 பள்ளிகளை சிறப்பிக்கும் வகையில் அந்தந்த பள்ளிகளில் விழா நடந்தது. இதை தொடர்ந்து, கோவை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 12ம் தேதியன்று நூற்றாண்டை கடந்த அனைத்து பள்ளிகளுக்கும், கலெக்டர் பவன்குமார் தலைமையில் சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
இதில், 58 பள்ளிகளில், சிறந்த பள்ளியாக கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு வழங்கப்பட்டது. இதற்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை பள்ளி தலைமை ஆசிரியர் செல்விராணி மற்றும் ஆசிரியர்கள் இணைந்து கலெக்டரிடம் பெற்றுக்கொண்டனர்.