தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முதலாண்டு மாணவர்கள் வரவேற்பு 

 முதலாண்டு மாணவர்கள் வரவேற்பு 

 முதலாண்டு மாணவர்கள் வரவேற்பு 


ADDED : ஜூலை 10, 2026 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 12:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ரத்தினம் குளோபல் நிகர்நிலை பல்கலையின் முதலாமாண்டு இளங்கலை மாணவர்களின் வரவேற்பு விழா நேற்று நடந்தது.

மதன்செந்தில் பேசுகையில், ''கல்வி என்பது மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்டு, அறிவைப் பெறுதல், திறன்களை வளர்த்தல் மற்றும் புதுமைகளை கொண்டு வருவதாக இருக்க வேண்டும். மாணவர்கள் பன்முக ஆளுமைகளாக உருவாக வேண்டும்,'' என்றார்.

சிறப்பு விருந்தினர், பேச்சாளர் மகேஷ் பேசுகையில்,''வாழ்க்கையை மாற்றுவதற்கும், சமூகத்தை மேம்படுத்துவதற்கும் கல்விதான் மிகவும் சக்திவாய்ந்த கருவியாக உள்ளது. இதற்காக, மாணவர்கள் உழைக்க வேண்டும். வாழ்க்கையின் முதல் 25 ஆண்டுகளில் உழைத்தால் தான், அடுத்த 50 ஆண்டுகால வெற்றிக்கு அடித்தளமிட முடியும்,'' என்றார்.

பதிவாளர் கிருஷ்ணராஜ் வரவேற்றார். துணைவேந்தர் நாகராஜ், துணைத் தலைவர் மாணிக்கம், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநர் சிவசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us