/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பனிப்பொழிவு காரணமாக குறைந்து விட்டது மீன் வரத்து
/
பனிப்பொழிவு காரணமாக குறைந்து விட்டது மீன் வரத்து
பனிப்பொழிவு காரணமாக குறைந்து விட்டது மீன் வரத்து
பனிப்பொழிவு காரணமாக குறைந்து விட்டது மீன் வரத்து
ADDED : டிச 22, 2025 05:36 AM

கோவை: பனிப்பொழிவு அதிகம் உள்ள காரணத்தால், மீன்கள் வரத்து வழக்கத்தை காட்டிலும் சற்று குறைவாக இருந்தன. இருப்பினும் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை என, மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை மீன்மார்க்கெட்டுக்கு ராமேஸ்வரம், நாகப்பட்டினம், துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து மீன் வரத்து இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில், 10 முதல் 20 டன் வரை மீன்கள் வரத்து இருக்கும். நேற்று, 18 டன் வரத்து இருந்தது.
லாரிபேட்டை மீன் மார்க்கெட் பகுதியில், நேற்று மத்தி 130 ரூபாய், அயிலை 260 ரூபாய், ஊளி 350 ரூபாய், நெத்திலி 350 ரூபாய், மத்தி 160 ரூபாய், கடல் இறால் 600 ரூபாய், டைகர் இறால் 700 ரூபாய், இறால் 550 ரூபாய், மத்தி 250 ரூபாய், டேம் வாவல் 160 ரூபாய்,நெய் மீன் 130 ரூபாய், ஜிலேபி 150 ரூபாய், ரோகு 180 ரூபாய், கட்லா 200 ரூபாய், கிழங்கான் 220 ரூபாய், கலிங்க முரல் 400 ரூபாய், மடவை 350 ரூபாய், பாறை 300 ரூபாய், சங்கரா 320 ரூபாய், தேங்கா பாறை 600 ரூபாய், பூங்குயில் 380 ரூபாய், கிளமீன் 500 ரூபாய், கருப்பு வாவல் 850 ரூபாய்க்கு விற்பனையானது.
லாரிபேட்டை மீன் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த ரகுமான் கூறுகையில், ''பனிக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்வது குறைவு. இதனால், மீன்கள் வரத்து குறைந்துள்ளது. 20 டன் வரும் இடத்தில், 18 டன் வந்தது. விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. தினந்தோறும் கிடைக்காத பூங்குயில் மீன் விற்பனைக்கு வந்தது. சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்தது. வஞ்சிரம் மீன் போன்று இந்த மீன் சுவையாக இருக்கும்,'' என்றார்.

