/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீன் வரத்து அதிகரித்தும் விலையில் மாற்றமில்லை
/
மீன் வரத்து அதிகரித்தும் விலையில் மாற்றமில்லை
ADDED : ஜன 19, 2026 05:24 AM
கோவை: பனிப்பொழிவு காரணமாக கடந்த மாதங்களில் மீன் வரத்து சற்று குறைந்து இருந்தது. தற்போது, மீன் வரத்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை மீன்மார்கெட்டிற்கு ராமேஸ்வரம், நாகப்பட்டினம், துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து மீன் வரத்து இருக்கும். டிச., மாதம் 20 டன் வரை வரத்து இருந்த நிலையில், நேற்று 50 டன் அளவில் வரத்து இருந்தது.
லாரிபேட்டை மீன் மார்கெட் பகுதியில், நேற்று நிலவரப்படி, மத்தி 150 ரூபாய், இறால் 450ரூபாய், மடவை 450 ரூபாய்,ஊளி 400 ரூபாய், நெய்மீன் 140 ரூபாய், சங்கரா 250 ரூபாய், கிழங்கா 250 ரூபாய், வெள்ளை கிழங்கா 400 ரூபாய், நகரை 450 ரூபாய், எட்டை 400 ரூபாய், மஞ்சபாறை 550 ரூபாய், கட்லா 200 ரூபாய், வஞ்சரம் 900 ரூபாய், ரோகு 180 ரூபாய், வாவல் 160 ரூபாய், சின்ன மத்தி 160 ரூபாய், பப்ரூஸ் 400 ரூபாய், விளமீன் 650 ரூபாய், அயிலை 320 ரூபாய், பூங்குயில் 450 ரூபாய், உடகம் 300 ரூபாய், நெத்திலி 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மீன் வியாபாரிகள் சங்க நிர்வாகி காதர் கூறுகையில், '' மீன் வரத்து வழக்கம் போல் துவங்கியுள்ளது. தை அமாவசை என்பதால் சற்று வியாபாரம் டல்லாக இருந்தது. விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை,'' என்றார்.

