தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கார்த்திகையை முன்னிட்டு மீன் விற்பனை குறைந்தது

கார்த்திகையை முன்னிட்டு மீன் விற்பனை குறைந்தது

கார்த்திகையை முன்னிட்டு மீன் விற்பனை குறைந்தது


UPDATED : நவ 29, 2026 07:24 PM

ADDED : நவ 29, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 07:24 PM ADDED : நவ 29, 2026 07:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கார்த்திகை மாதத்தை முன்னிட்டு மீன் விற்பனையும், விலையும் குறைந்துள்ளது.

கோவை மீன் மார்க்கெட்டுக்கு, கேரளம், ராமேஸ்வரம், கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தினமும், 50 முதல் 60 டன்கள் வரை வரத்து உள்ளது.

புரட்டாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் விரதம் இருப்பவர்கள் அதிகம் என்பதால், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை பெரும்பாலானவர்கள் தவிர்ப்பது வழக்கம். இதனால் உக்கடம் மீன் மார்க்கெட்டில், மீன் விலை குறைந்து இருந்தது.

நேற்று உக்கடம் மீன் மார்க்கெட்டில் சாலமன் கிலோ ரூ.950, வஞ்சரம் ரூ. 700, கருப்பு வாவல் ரூ.750, வெள்ளை வாவல் ரூ.999, துானா ரூ.599, தேங்காய் பாறை ரூ.599, கடல் கறி மீன் ரூ.350, கொடுவா ரூ.400, ஊளி ரூ.450, இறால் ரூ.650, கருப்பு வாவல் ரூ.750, மடவை மற்றும் கிளாத்தி ரூ. 400, கிழங்கான் மற்றும் அயிலை ரூ.250, கனவா ரூ.300, மத்தி ரூ.200, நண்டு ரூ.550, விற்பனை செய்யப்பட்டது.

உக்கடம் லாரி பேட்டை மீன் மார்க்கெட் மொத்த விற்பனையாளர் சங்க செயலாளர் காதர் கூறுகையில், ‘‘கார்த்திகை மாதம் என்பதால் மீன் விற்பனையும், மீன் விலையும் குறைந்துள்ளது. இன்னும் இரண்டு வாரத்துக்கு மீன் விலை உயர வாய்ப்பு இல்லை’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us