/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளியை குத்தி கொன்ற ஐந்து கொடூரர்கள் கைது
/
தொழிலாளியை குத்தி கொன்ற ஐந்து கொடூரர்கள் கைது
ADDED : ஜூன் 04, 2025 01:00 AM

பெ.நா.பாளையம்:சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், ஒட்டப்பட்டி மேலுாரை சேர்ந்தவர் சுப்ரமணி, 32; சென்ட்ரிங் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன், 31, வீட்டுக்கு சென்று பணம் கேட்டார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், கமலக்கண்ணன் கத்தியால் குத்தியதில் சுப்ரமணி இறந்தார்.
இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் கமலக்கண்ணன் உட்பட, ஐந்து பேரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், சுப்ரமணி, கமலக்கண்ணன் சென்ட்ரிங் கூலி தொழிலாளர்கள். தன் ஊதிய பணத்தை கேட்க, கமலக்கண்ணன் வீட்டுக்கு சுப்ரமணி சென்றார். இருவரும் போதையில் இருந்த நிலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. சுப்ரமணி, கமலக்கண்ணனின் தங்கை கண்மணி, தாய் உமாவை தாக்கியுள்ளார்.
ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், அவரது உறவினர்கள் நான்கு பேர், சுப்ரமணியை துாணில் கட்டிப்போட்டு தாக்கி, கமலக்கண்ணன் கத்தியால் குத்தியதில் சுப்ரமணி இறந்தார் என, போலீசார் கூறினர்.