/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்து வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
/
ஐந்து வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
ADDED : மார் 14, 2026 06:43 AM

கோவை: உடுமலையை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து, அவரது உடல் உறுப்புகள் நான்கு பேருக்கு புதிய வாழ்வை வழங்கியுள்ளன.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மகன் சிவாதித்யா. சமீபத்தில், தனது தாத்தாவுடன் சென்றபோது சாலை விபத்தில் காயமடைந்தார். கோவையில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். சிவாதித்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் விதிமுறைகளின்படி, பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு சிறுவனின் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் இதயம் ஆகியவற்றை கோவை ராயல் கேர், சேலம் மற்றும் சென்னையில் உள்ள நோயாளிகளுக்கு பொருத்தினர்.
உரிய மரியாதை செலுத்தப்பட்டு சிறுவனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெற்றோரின் உன்னத செயலை அனைவரும் பாராட்டினர்.

