ADDED : செப் 17, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலையில், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின், 27வது உதய தின விழா கொண்டாடப்பட்டது.
உடுமலையிலுள்ள மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உபகரணங்கள், காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து, உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், கொடி ஏற்று னிழா நடந்தது.
உட்கோட்ட செயலாளர் செல்லமுத்து தலைமை வகித்தார். சங்க கொடியை, மாநில பொது செயலாளர் அம்சராஜ் ஏற்றினார்.
அரசு ஊழியர் சங்க கொடியினை, மாவட்ட இணை செயலாளர் வைரமுத்து எற்றினார். மாவட்ட துணைத்தலைவர் எலிசபெத்ராணி, ஓய்வூதியர் சங்கம் பாலகிருஷ்ணன், சாலைபணியாளர் சங்க நிர்வாகிகள் வெங்கடசாமி, வெற்றிச்செல்வி, செல்லமுத்து, கருப்புச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
