/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தைப்பூசத் திருவிழாவுக்கு வரும் 7ல் கொடியேற்றம்
/
தைப்பூசத் திருவிழாவுக்கு வரும் 7ல் கொடியேற்றம்
ADDED : ஜன 31, 2025 11:43 PM
வால்பாறை; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழா வரும், 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 20ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவில், வரும், 7ம் தேதி வெள்ளிக்கிழமை காலை, 9:30 மணிக்கு திருக்கொடி ஏற்றப்படுகிறது.
வரும், 10ம் தேதி மாலை, 4:30 மணிக்கு, சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 11ம் தேதி காலை, 9:00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், பால்குடம் எடுக்கின்றனர். காலை, 11:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், முருகப்பெருமான் தேவியருடன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்நிலையில், தைப்பூசத் திருவிழா அழைப்பிதழை விழாக்குழுவினர் நேற்று காலை, முருகப்பெருமான் காலடியில் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தைப்பூச விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.