தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்


UPDATED : அக் 21, 2026 08:28 PM

ADDED : அக் 21, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 08:28 PM ADDED : அக் 21, 2026 08:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையம் தடுப்பணை தூர்வாரப்படாததால், சிறு மழைக்கே தடுப்பணை நிறைந்து வழிகிறது. மேலும், தடுப்பணைக்கு வரும் தண்ணீரில் சாக்கடை நீரும் கலப்பதால், புதுப்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தடுப்பணை நிறைந்து வழியும் போது, நரசிம்மநாயக்கன்பாளையத்திலிருந்து மணியகாரம்பாளையம், இடிகரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். இதனால் இரண்டு ஊர்களுக்கும் இடையே சாலை துண்டிப்பு ஏற்படுகிறது. அவசரமாக செல்ல வேண்டிய நபர்கள், மேட்டுப்பாளையம் ரோடு, என்.ஜி.ஜி.ஓ., காலனி வழியாக உயர் மட்ட மேம்பாலத்தில் பயணம் செய்து இடிகரை செல்ல வேண்டி உள்ளது. பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர்.

இதையடுத்து நேற்று புதுப்பாளையம் தடுப்பணை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us