/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணியருக்கு தடை
/
அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணியருக்கு தடை
அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணியருக்கு தடை
அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணியருக்கு தடை
ADDED : டிச 04, 2025 06:43 AM

- நிருபர் குழு -
ஆழியாறு கவியருவி, திருமூர்த்தி பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு, வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர். ஆழியாறில் உள்ள கவியருவியில், சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில், வால்பாறை மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால், ஆழியாறு கவியருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணியர் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர். ஆழியாறு வந்த சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
* உடுமலை அருகே திருமூர்த்திமலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால், பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல, சுற்றுலா பயணியர், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில், வழக்கமான பூஜைகள் நடந்தது. கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

