நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; சாலையூர், பழனியாண்டவர் கோயிலில் வரும் 22ம் தேதி மலர் காவடி பெருவிழா நடக்கிறது.
கோவை, சின்ன வேடம்பட்டி, கவுமார மடாலயத்தில் மாநில முருக பக்தர்கள் பேரவை செயல்படுகிறது. சாலையூரில் பல நுாறு ஆண்டுகள் பழமையான சித்தர்கள் வழிபட்ட பழனி ஆண்டவர் கோவில் உள்ளது.
முருக பக்தர்கள் பேரவையின் சார்பில், மலர் காவடி பெருவிழா வருகிற 22ம் தேதி காலை 9:00 மணிக்கு, சாலையூர் பழனியாண்டவர் கோவிலில் நடைபெற உள்ளது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மலர் காவடி எடுக்கின்றனர்.
'இவ்விழாவில் மலர் காவடி எடுக்க விரும்பும் முருக பக்தர்கள், பழனியாண்டவர் கோவிலில் வருகிற 20ம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்,' என கோவில் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.