/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூ உற்பத்தி உயர்ந்தது; விலை வீழ்ந்தது
/
பூ உற்பத்தி உயர்ந்தது; விலை வீழ்ந்தது
ADDED : மே 19, 2025 11:57 PM

கோவை,; மல்லி, முல்லை பூக்கள் உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. கோவை பூமார்க்கெட்டுக்கு, ஊட்டி, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினமும் உதிரிப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
வெயில் காலத்தில் மல்லி, முல்லை உள்ளிட்ட பூக்கள் உற்பத்தி அதிகரிப்பது வழக்கம். இதனால் கோவை மார்க்கெட்டுக்கு வரும் பூக்கள் அளவு அதிகரித்துள்ளது.
சித்திரை வைகாசி மாதத்தில் கல்யாண மூகூர்த்தங்கள் இல்லாதால், உதிரிப்பூக்கள் விலை குறைந்துள்ளது. மல்லி கிலோ, 400 ரூபாய்க்கும், முல்லை 200 ரூபாய்க்கும், அரளி 80 ரூபாய்க்கும், செவ்வந்தி 100 ரூபாய்க்கும், சம்பங்கி 30 ரூபாய்க்கும் விற்பனையானது.
வியாபாரிகள் கூறுகையில், 'கல்யாண விசேஷங்கள் இல்லாததால், பூ விற்பனை தேங்கி உள்ளது. கோவில் விழாக்களும் முடிந்து விட்டன. ஆகவே, இந்த மாதம் முழுவதும் பூ விலையும், விற்பனையும் குறைவாகதான் இருக்கும்' என்றனர்.