sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பறக்கும்' வாகன ஓட்டிகளே, கூடாது வேகம்!: கண்காணிக்கின்றன கேமராக்கள்

/

'பறக்கும்' வாகன ஓட்டிகளே, கூடாது வேகம்!: கண்காணிக்கின்றன கேமராக்கள்

'பறக்கும்' வாகன ஓட்டிகளே, கூடாது வேகம்!: கண்காணிக்கின்றன கேமராக்கள்

'பறக்கும்' வாகன ஓட்டிகளே, கூடாது வேகம்!: கண்காணிக்கின்றன கேமராக்கள்

3


UPDATED : ஜன 26, 2025 09:08 AM

ADDED : ஜன 26, 2025 05:49 AM

Google News

UPDATED : ஜன 26, 2025 09:08 AM ADDED : ஜன 26, 2025 05:49 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து கட்டுப்படுத்த, மாநகர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கென பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, வேகமாக செல்லும் வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்தால், வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறது.

சமீப காலமாக கோவை மாநகர பகுதிகளில் செல்லும், வாகனங்களின் வேகம் அதிகரித்துள்ளது. கல்லுாரி செல்லும் மாணவர்கள் பலர், கட்டுப்பாடு இல்லாமல் அதிவேகமாக வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் பல இளைஞர்கள் தங்களின் உயிரை இழக்கின்றனர். கை, கால் ஊனமடைகின்றனர்.

அதிவேகமாக வாகனத்தை இயக்குபவரால் அவர் மட்டுமின்றி, சாலையில் பயணிக்கும் பிறருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இதை கண்காணிக்க, கோவை மாநகரில் குனியமுத்துார் ரோடு, அவிநாசி ரோடு ஹோப்ஸ் அருகில் மற்றும் சரவணம்பட்டி ஆகிய இடங்களில், வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க, கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அந்த கேமராக்கள், வேகத்தை கண்காணித்து அதிவேகமாக செல்லும் வாகனங்களை படம் பிடிக்கும். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கின்றனர்.

சரவணம்பட்டி, ஹோப் காலேஜ் மற்றும் குனியமுத்துார் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் கடந்த ஒரு ஆண்டில், 9101 வாகனங்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை கிழக்கு போக்குவரத்து பகுதியில் 336 வழக்குகளும், மேற்கு போக்குவரத்து பகுதியில் 8765 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு முறை வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்கள், மீண்டும் வழக்கில் சிக்கினால் வாகனங்களை, பறிமுதல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாநகரில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தி விபத்துகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 60 கிமீ.,க்கும் அதிகமாக செல்லும் வாகனங்களுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. போலீசார் இல்லாத பகுதிகள் மற்றும் கல்லுாரிகள் இருக்கும் பகுதிகளில், 'ஸ்பீடு டிடெக்டர்' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீசார் தணிக்கையின் போது பயன்படுத்தும் 'ஸ்பீடு கன்' செயல்பாடுகளை, நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கவுள்ளோம்' என்றார்.

கோவை கிழக்கு போக்குவரத்து பகுதியில் 336 வழக்குகளும், மேற்கு போக்குவரத்து பகுதியில் 8765 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு முறை வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்கள், மீண்டும் வழக்கில் சிக்கினால் வாகனங்களை, பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us