தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'சாய்ஸ் பில்லிங்கில் கவனம்'

 'சாய்ஸ் பில்லிங்கில் கவனம்'

 'சாய்ஸ் பில்லிங்கில் கவனம்'


ADDED : ஜூன் 21, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 04:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புருேஷாத்தமன்: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் விண்ணப்பப் பதிவு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்துள்ளன.தரவரிசைப் பட்டியல் வெளியான பிறகு, மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை முன்னுரிமை அடிப்படையில் இணையதளத்தில் பதிவு செய்யும் 'சாய்ஸ் பில்லிங்' நடைபெறும்.

மாணவர்கள் தங்களது தரவரிசையை கருத்தில் கொண்டு, விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளின் கட்-ஆப் விவரங்கள் www.tneaonline.org இணையதளத்தில் இடம்பெற்றுள்ளதால், அதனை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான கல்லுாரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்யலாம்.

இறுதி ஒதுக்கீடு, மாணவர்களின் தரவரிசை மற்றும் விருப்பத் தேர்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும். கல்லுாரி ஒதுக்கீடு கிடைத்த பின், மாணவர்கள் கட்டணம் செலுத்தி தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து சேர்க்கையை உறுதிப்படுத்தலாம். பொறியியல் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை யாரிடமும் பகிரக் கூடாது.

சந்தேகங்களுக்கு மாவட்டந்தோறும் செயல்படும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேவை மையங்கள் அல்லது 1800-425-01100 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us