/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவர்க்கலில் பனிமூட்டம்; சுற்றுலா பயணியர் குஷி
/
கவர்க்கலில் பனிமூட்டம்; சுற்றுலா பயணியர் குஷி
ADDED : அக் 24, 2024 09:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: வால்பாறையில், பருவமழை பரவலாக பெய்யும் நிலையில், எஸ்டேட் பகுதியில், காலை, மாலை நேரங்களில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால், அதிகாலை நேரத்தில் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பருவமழையால் சிதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, இரவு நேரத்தில் கடுங்குளிர் நிலவுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை கவர்க்கல் எஸ்டேட் பகுதியில், காலை, மாலை நேரங்களில் பனிபடர்ந்து காணப்படுகிறது. பனி மூட்டத்தின் ரம்யமான காட்சியை சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசித்தனர்.